முக்கியச் செய்திகள் தமிழகம்

திராவிட மாடல் என்று சொல்லாமல் திராவிட மாதிரி என்று சொல்லலாம் – தமிழிசை

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, தாய்மொழியை கற்று மற்றொறு மொழியையும் கற்று கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

 

கோவையில் ரோட்டரி கிளப் சார்பில் தனியார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், தான் கோவையின் மருமகள் என கூறினார். முகக்கவசம் அணியாமல் கூட்டத்தை கூட்டுவதற்கு காரணம் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடிதான் என்ற அவர், தடுப்பூசி போடுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்த அனைத்து முதலமைச்சர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டார்.

 

பெண்கள் தங்கள் வாழ்வியல் முறையை மாற்றி கொள்ள வேண்டும் என்றும், இன்று முதல் அனைவரும் யோகா செய்ய பழகுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும் என ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டதாகவும், அனைவரும் தெரியும் என அவர்கள் பதில் தெரிவித்ததாகவும் கூறினார். பின்னர் தமிழ் புரிந்து கொள்ள கூடியவர்கள் எத்தனை பேர் என மேடையில் இருந்தவாறு அவர் கேள்வி எழுப்பினார்.

தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற தமிழிசை சௌந்தரராஜன், தாய் மொழியை கற்று இன்னொரு மொழியை கற்று கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார். ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசி பழகுவது நல்லது என்றும் கூறினார். தமிழ்நாடு அரசு ஓராண்டு நிறைவு பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர் அவர், அடுத்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்கு புதிய நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றார். மேலும் திராவிட மாடல் என்று சொல்லாமல் தமிழில் திராவிட மாதிரி என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், போலியோ ஒழிப்பை போல போதை ஒழிப்பில் பங்கு கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் 10 கோடி பேர் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்ற புள்ளி விவரங்களையும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

“உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகிறது”- நேட்டோ

Halley Karthik

ஆதிதிராவிடர் நல விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவிகள்!

Niruban Chakkaaravarthi

மத்திய அரசை எந்தப் பெயரால் அழைத்தாலும், அதிகாரத்தை குறைக்க முடியாது: வானதி சீனிவாசன்

Gayathri Venkatesan