தொடர் மழை: வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, கடந்த 9…

வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, கடந்த 9 ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதை அடுத்து அப்போது முதல், அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றபட்டு வருகிறது. நேற்றிரவு வரை வினாடிக்கு 2000 கன அடி நீர் அணையிலிருந்து வெளியேற்றபட்டது.

இந்நிலையில் வைகைஅணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய பெய்த தொடர்மழை காரணமாக அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையிலுள்ள 7 பெரிய மதகுகள், மற்றும் சிறிய மதகுகள் வழியாக இந்த தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை , இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் யாரும் குளிக்கவோ இறங்கவோ வேண்டாம் என்றும் பொதுபணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.