தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு வாகை
சந்திரசேகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக இசை அமைப்பாளர் தேவா பதவி வகித்து வந்தார். இவருடைய பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதோடு தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய தலைவர் பொறுப்பையும் அவர் வகிப்பார் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடிகர் வாகை சந்திரசேகர், 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர்-செயலராகப் பதவி வகித்தவர். வேளச்சேரி எம்.எல்.ஏவாக 2016 முதல் 2021 வரை இருந்தவர்.
இந்நிலையில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப் பட்டதற்கு வாகை சந்திரசேகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர், மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் என இரு பொறுப்புகளை வழங்கியுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரிதாக்குகிறேன் pic.twitter.com/3Wr3xMOWXS
— Vagai Chanderasekar (@vagaiyaar) August 15, 2021
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், ’தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர், மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் என இரு பொறுப்புகளை வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரிதாக்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.