சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக வடிவேலு டப்பிங் பேசிய வீடியோ வெளியீடு!

சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் டப்பிங் பணிகளை நகைச்சுவையாக எடிட் செய்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி…

சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் டப்பிங் பணிகளை நகைச்சுவையாக எடிட் செய்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு, வினித் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் 200 நாட்களுக்கும் மேல் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.

இந்நிலையில் லைகா பதயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 19 தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், வடிவேலு பேசிய டப்பிங் பணிகளை நகைச்சுவையாக எடிட் செய்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.