சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதற்கான இணையதள முன்பதிவு ஜனவரி 01-ஆம் தேதி தொடங்கியிருந்த நிலையில், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாந்தோப்பில் உள்ள அரசுப்பள்ளியில் இன்று தொடக்கி வைக்கிறார். ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு இன்று முதல் (ஜனவரி-3) கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகளுக்கான முன்பதிவு கோவின் இணையதளமான https://www.cowin.gov.in தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.








