அதிமுக ஆட்சியில் கோவை வளர்ச்சி பெற்றதா? – செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் கோவை வளர்ச்சி பெற்றதாக பொய்யான பிம்பத்தை சிலர் கட்டமைத்து ஏமாற்றியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திராவிடர் கழகம், திராவிட இயக்க பேரவையில் இணையும் விழா கோவையில் நேற்று…

அதிமுக ஆட்சியில் கோவை வளர்ச்சி பெற்றதாக பொய்யான பிம்பத்தை சிலர் கட்டமைத்து ஏமாற்றியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திராவிடர் கழகம், திராவிட இயக்க பேரவையில் இணையும் விழா கோவையில் நேற்று நடைபெற்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பில் இணைந்த தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் தலைவர் காசு.நாகராசனுக்கு, மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்படுதாக அதன் நிறுவனர் சுப.வீரபாண்டியன் அறிவித்தார்.

இவ்விழாவில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் கோவை வளர்ச்சி பெற்றதாக மாய பிம்பத்தை கட்டமைத்துள்ளதாக சாடினார். திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத காலத்தில், ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில், கடந்த காலங்களை போன்று இல்லாமல் முதலமைச்சர் உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.