கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மதுபானம் வாங்க வருவோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பொது இடங்களுக்கு செல்ல நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், கொரோனா ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் அல்லது கொரோனா பாதித்து ஒரு மாதத்துக்கு மேலானவர்கள் மட்டுமே, கடைகளுக்கு செல்ல வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டது. ஆனால் மது வாங்க செல்பவர்களுக்கு மட்டும் தளர்வுகள் வழங்கப்பட்டதால் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் கேரள அரசின் நடவடிக்கையை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை விசாரித்த நீதிமன்றம் மது வாங்க செல்பவர்களுக்கும் நிபந்தனைகளை கடுமையாக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து இன்று முதல், கேரளாவில் மதுக்கடைகளுக்கு செல்பவர்களுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட நிபந்தனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் உள்ளவர்கள், கொரோனா வந்து ஒரு மாதத்துக்கு மேலானவர்கள் மட்டுமே, மது வாங்க கடைக்கு செல்ல வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.