முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா பாதிப்புகளை ஆராய கேரளா விரைகிறது மத்தியக் குழு

கேரளாவில் தொடர்ந்து கொரனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் நேற்று கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 22,056 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மழப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3,931 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். நாடு முழுவதும் நேற்று கொரோனா தொற்று எண்ணிக்கை 43,509 ஆகக் குறைந்துள்ளது.

ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் 50 விழுக்காட்டிற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்புப் பணிகளை கண்காணிக்க 6 பேர் கொண்ட மத்தியக் குழு கேரளா செல்ல உள்ளது. ஒரே மாதத்தில் மத்தியக் குழு 2 வது முறையாக கேரளாவில் ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 131 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக 16,457 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

நள்ளிரவில் டான்ஸ்: ’தூக்கத்தை கெடுத்த’ இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

Ezhilarasan

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு

Jeba Arul Robinson

ஆலோசகராக செயல்பட தோனி சம்மதம்: ஜெய் ஷா மகிழ்ச்சி

Ezhilarasan