உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கு கடந்த 14 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தை துளையிடும் பணியின்போது துளையிடும் பகுதியில் இரும்பு கம்பிகள் குறுக்கிட்டதால் துளையிடுவதில் சிக்கல் ஏற்பட்டு மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் மீட்புக் குழுவினர் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மாற்று வழியில் மீட்பதற்கு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மலையின் மேலே இருந்து கீழ்ப்பகுதி வரை செங்குத்தாகத் துளையிட்டு மீட்புப் பணியைத் தொடர முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.







