5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது

உத்திர பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அனுஜ்…

உத்திர பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற போலி சாமியார் கடந்த 2005ல் மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதன்பின் 2010ல், பரோலியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவருடனும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மீண்டும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். இதைத்தொடர்ந்து 2014ம் ஆண்டு அனுஜ் மூன்றாவதாக திருமணம் செய்தார். அடுத்த சில காலங்களில் 3வது மனைவியின் உறவு பெண் ஒருவரை அனுஜ் நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். முந்தைய திருமணங்கள் குறித்து அறிந்து கொண்ட அந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதையடுத்து 2019ல் அனுஜ் மீண்டும் ஒருவரை 5வதாக திருமணம் செய்து கொண்டார். தனது 5வது மனைவியை அனுஜ் துன்புறுத்தியதால் அவர் போலீசில் புகாரளித்துள்ளார். இதனால், அவர் இதுவரை முறையாக விவாகரத்து பெறாமல் 5 திருமணம் செய்தது அவரது மனைவிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இதுகுறித்து போலீசில் புகாரளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.