முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜூலை மாதத்தில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில் 16ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 335 கோடி ரூபாய் குவிந்துள்ளதாக தெரிவித்தார். இதில் 141 கோடி ரூபாய் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள 50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற் நிறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக 10 ஆயிரத்து 68 கோடி ரூபாயை புதிய அரசு பதவியேற்றதிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வரும் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும், இதன்மூலம் மாநிலத்தின் நிதிநிலை குறித்த முழுமையான விவரம் பொதுமக்களுக்கு தெரியவரும் எனவும் உரையில் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் கையிருப்பில் தற்போது இல்லை: சுகாதாரத்துறை செயலர்

106 நாட்களுக்கு பின்னர் பயணத்தை தொடங்கியது எவர் கிவன்

Halley karthi

உத்தரபிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாவிட்டால் ரூ.10ஆயிரம் அபராதம் : யோகி ஆதித்யநாத்

Halley karthi