#USElection | ட்ரம்ப் வெற்றி எதிரொலி – #ElonMusk சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பின் வெற்றியின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்துமதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது.…

#USElection | Trump victory echoes - #ElonMusk's asset value has increased many times over!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பின் வெற்றியின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்துமதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது.

தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். அவருடைய பிரசாரத்திற்கு சுமார் 119 பில்லியன் டாலர்களை நன்கொடை அளித்திருந்தார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அவரது நிகர மதிப்பு 26.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 290 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரது நிறுவனங்களின் பங்குகள் கூடியுள்ளன.

டெஸ்லாவின் ஒரு பங்கு 14.75% (37.09 டாலர்கள்) அதிகரித்து 288.53 டாலரை எட்டியுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி அன்று 242.84 டாலராக இருந்த பங்குகள், நவம்பர் 6 ஆம் தேதி 288.53 டாலராக உயர்ந்துள்ளது. டிரம்பின் வெற்றியால் எலான் மஸ்க் மட்டுமின்றி உலகின் இரண்டாவது பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 7.14 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 228 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்க பங்குச் சந்தை பொதுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.