அமெரிக்கா : பனிப்புயலால் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது.

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. இதனிடையே தனியார் ஜெட் விமானம் ஒன்று கடும் பனியால் விபத்தில் சிக்கியுள்ளது. இது கே உரித்த தகவலின் பேரில், கடந்த ஞாயிறுகிழமை இரவு 7:45 மணியளவில், பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருந்துள்ளனர்.

அப்போது ஓடுபாதையிலிருந்து கிளம்பிய விமானம் அடுத்த 45 வினாடிகளில், கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் விழுந்து தீப்பற்றி விபத்திற்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பகுதியில் மிகக் கடுமையான பனிப்புயல் வீசியது என்றும் மோசமான வானிலையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த விபத்தினால் பேங்கர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.