அமெரிக்கா | புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் புகுந்து 10 பேர் உயிரிழப்பு… 30 பேர் காயம்!

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட்டத்தில் நின்ற மக்கள் மீது கார் மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இன்று காலை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது,…

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட்டத்தில் நின்ற மக்கள் மீது கார் மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இன்று காலை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கூட்டத்தில் நின்ற மக்கள் மீது கார் மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 30 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய SUV காரை ஓட்டி வந்த நபர், கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே கார் வேகமாக சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த மோதலை தொடர்ந்து காரை ஓட்டி வந்தவர் வெளியே சுடத் தொடங்கினர். இதற்கு எதிராக போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளி குறித்த தகவல் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.