அமெ. ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்…!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.  அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற ஆடவர்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், தரவரிசைப்பட்டியலில் முன்றாவது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவை எதிர்கொண்டார்.

ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் முதல் ஆட்டத்தில் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். உடனடியாக சுதாரித்துக்கொண்டு பதிலடி கொடுத்த மெத்வதேவ் இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். இருவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த, இந்த போட்டி 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்தது.இறுதியில் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 6-3 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி வெற்றியை தன்வசப்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை வென்ற ஜோகோவிச், 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று புதிய சாதனை படைத்தார். இதன் விளைவாக் ஜோகோவிச் 25 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக பெற்றார்.

அதோடு, இந்த வெற்றியின் மூலம் 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தன்னை வீழ்த்தியதற்கு, மெத்வதேவை வீழ்த்தியுள்ளார் ஜோகோவிச். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை அவர் வெல்வது இத்துடன் நான்காவது முறையாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.