காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச முதலுதவி பயிற்சி!

காரைக்குடியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கான இலவச முதலுதவி பயிற்சி முகாமில், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் திருமண மஹாலில் பிரபு டென்டல் மருத்துவமனை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான…

காரைக்குடியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கான இலவச முதலுதவி பயிற்சி முகாமில், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் திருமண மஹாலில் பிரபு டென்டல்
மருத்துவமனை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான இலவச முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாரடைப்பு, சாலை விபத்து, பாம்பு கடி, நாய்க்கடி, வலிப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலையில் எவ்வாறு முதலுதவியினை மேற்கொள்ளுவது, எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட காட்சிகள் மற்றும் செயல் விளக்கம் தரப்பட்டது. மேலும் இது குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவர் சிவப்பிரகாஷ் விளக்கம் அளித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் துரை.கருணாநிதி தலைமை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர மன்ற தலைவர் முத்து துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பிரபு டென்டல் மருத்துவமனையில் நிறுவனர் டாக்டர் பிரபு செய்திருந்தார். இந்த பயிற்சி முகாமில் நகர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.