அமைச்சர் செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு விரைவாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்த நிலையில் இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு இன்று மாலையே அறுவை சிகிச்சை நடைபெறும் என ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவாகரம் தொடர்பாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் சட்ட விரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ, நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் முறையிட்டனர். வழக்கு பிற்பகல் 2:15 மணிக்கு விசாரிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் அமர்வில் இருந்த இரு நீதிபதிகளில் நீதிபதி சக்திவேல் விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே நடைமுறை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார். அதன்படி நீதிபதி எம்.சுந்தர் தலைமையிலான அமர்வில் நீதிபதி சக்திவேல் விலகியதால் அந்த இடத்திற்கு உயர்நீதிமன்ற நடைமுறைப்படி வேறோரு நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை வேறோரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக வழக்கறிஞர்கள் அனுமதி பெற்று இருப்பதாகவும், இது குறித்து மருத்துவமனையில் உள்ள அமலாக்கத்துறையினரிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வழக்கறிஞர்கள் வருகை தந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ரிமாண்ட் செய்ய தீவிரம் காட்டி வரும் நிலையில் நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு வர உளளார். திமுக சட்ட வல்லுனர் இளங்கோவன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உடன் அமைச்சர்கள் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பட்டியலிடப்பட்ட மற்ற வழக்குகளை விசாரித்த பிறகே மாலை 5 மணி அளவில் நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







