கேரளாவிற்கு ஏற்றுமதி செய்த யூரியா கலந்த பால் பறிமுதல்

டேங்கர் லாரியின் மூலம் கொண்டு செல்லப்பட்ட12,750 லிட்டர் பால் பறிமுதல் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு டேங்கர் லாரியில் மூலம் கொண்டு செல்லப்பட்ட பால் பறிமுதல் செய்யப்பட்டது.கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட…

டேங்கர் லாரியின் மூலம் கொண்டு செல்லப்பட்ட12,750 லிட்டர் பால் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு டேங்கர் லாரியில் மூலம் கொண்டு செல்லப்பட்ட பால் பறிமுதல் செய்யப்பட்டது.கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட இருப்பதால் பாலின் தேவை அதிகரித்துள்ளது. எனவே அதனை பூர்த்தி செய்ய தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பால் கேரளாவிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையொட்டி கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் பால்வளத் துறை சார்பாக கேரளா மாநிலத்திற்குள் கொண்டுவரப்படும் பாலில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என சோதனை செய்தபின் அனுமதித்து இருந்தனர்.

பாலக்காட்டிலுள்ள கேரளா தமிழக எல்லையான மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் தமிழகத்திலிருந்து லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட 12,750 லிட்டர் பாலை பரிசோதனை செய்ததில் அதில் யூரியா கலந்து இருப்பது தெரியவந்தது. அந்த டேங்கர் லாரியை உடனடியாக பறிமுதல் செய்து நடவடிக்கைக்காக உணவு துறையிடம் ஒப்படைத்தனர். பாலில் தரத்தை அதிகரிக்க யூரியா சேர்க்கப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி ஓணம் சமயத்தில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கலப்படம் செய்த பாலை அனுப்பப்படுவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.