28.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் Local body Election

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நேற்றுவரை 37,518 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதன்படி, வேட்பாளர் மற்றும் வேட்பாளரை முன்மொழிபவர் என இருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல, கோவை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சுயேட்சையாக போட்டியிடுபவர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இறுதி நாளான இன்று மக்கள் கூடுவதை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அண்மைச் செய்தி: கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றக் கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல்

மதுரையில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தரும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரை 537 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 3 நகராட்சிகளுக்கு உட்பட 78 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரை 276 பேரும், 9 பேரூராட்சிகளுக்கு உட்பட 144 பதவிகளுக்கு இதுவரை 343 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேருராட்சி வார்டுகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 699 வார்டுகளில் போட்டியிட இதுவரை ஆயிரத்து 404 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இறுதி நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram