முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் மது பாட்டிலில் இறந்து கிடந்த பூச்சிகள்..

சென்னையில் அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில், பூச்சிகள் இறந்து கிடந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை அம்பத்தூர் மண்ணூர்பேட்டை அருகே முகப்பேர் சாலையில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இங்கு வாடிக்கையளர் ஒருவர், மதுபாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த பாட்டிலில் பூச்சி போன்று ஏதோ ஒன்று மிதந்துள்ளது. இதுகுறித்து கடை மேற்பார்வையாளரிடம் அவர் கேட்டதிற்கு அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாடிக்கையாளர் மது பாட்டில் பூச்சி மிதப்பது குறித்து வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

அந்த வீடியோவில் மது பாட்டிலில் 8 பூச்சிகள் மற்றும் கொசுக்கள் மிதப்பதாக குற்றம் சாட்டிய அவர், தினமும் இதே வகை மதுவைத்தான் தினமும் அருந்தி வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கடையில் இருக்கும் அனைத்து மது பானங்களையும் அதிகாரிகள் அய்வு செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement:
SHARE

Related posts

கரூர் இளம் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல் காந்தி!

Jayapriya

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Halley Karthik

’மதுரையில் கலைஞர் நூலகம் – அறிவுத்தாகம் தீர்க்கும் முதலீடு’: சு.வெங்டேசன் எம்.பி புகழாரம்!

Halley Karthik