31.3 C
Chennai
April 24, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடிமைப் பணி தேர்வு முடிவுகள்; 685 பேர் தேர்ச்சி

2021ம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 685 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS), ஐஎஃப்எஸ் (IFS) ஐஆர்எஸ் (IRS) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான 749 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் முதன்மை எழுத்துத் தேர்வு, பிரதான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த தேர்வின் இறுதி முடிவுகளை இன்றைய தினம் மத்திய பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.upsc.gov.in -ல் வெளியிட்டது. அதன்படி 685 பேர் நடப்பாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 244 பேர் பொதுப் பிரிவிலும், 73 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினரும், 203 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 15 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், 60 பேர் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார். மேலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கவும் மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளின் படி நாட்டில் முதல் மாணவியாக உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுருதி சர்மா இடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்பவர் இந்திய அளவில் 42வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். 2021ம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் முக்கியமான தருணத்தில் குடிமைப் பணியில இணைய இருப்பவர்களுக்கு தனது வாழ்த்துகள் எனவும்
அதேவேளையில், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி வாய்ப்பை இழந்தவர்களின் வேதனையை உணர்வதாகவும், ஆனால் அந்த இளைஞர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் எனவும் பிரதமர் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading