யுபிஎஸ்சி 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு : தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்த மதுரைப் பெண்………..!

2025ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட முதன்மை பணிகளுக்காக நடத்தப்படும் இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளை கொண்டுள்ளது.

அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் எழுத்து தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதமும், 2026 பிப்ரவரியில் நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன் படி சிவில் சர்வீஸ் தேர்வில் மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர்  இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தொடர்ந்து தமிழ் நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் டவுன்லோட் லிங் : https://upsc.gov.in/

யார் இந்த ராஜேஸ்வரி சுவே 

யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ராஜேஸ்வரி சுவே, மதுரையை சேர்ந்தவராவார். இவர் 2018 ஆம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் டாப் ரேங்கில் தேர்வாகி தற்போது துணை ஆட்சியராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில், 2026 ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.