ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் சென்று பயணிகள் படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது, விபத்தில் சிக்கி இதுவரை 27 பேர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மீட்பு படையினர் 77 பேரை மேடு மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த முகமை கூறியது.
இந்நிலையில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 27 பேர் மாயமாகி உள்ளனர். இதனை அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இதனிடையே 90 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அப்படகில், பயணச்சீட்டு விற்பனையின் அடிப்படையில் 114 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் படகில் இருந்ததாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ஜிம்பாப்வே காவல்துறை தெரிவித்திருந்தது,




