விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படத்தின் டைட்டில் லுக் நாளை (ஜூலை 12) வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல, ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற பாலிவுட் படத்தில் கத்ரீனா கைஃபுடன் இணைந்து நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
#VJS50TitleLook is releasing Tomorrow at 6 PM ♟🦅
From the Director of "Kurangu Bommai"
Written & Directed by @Dir_nithilan#VJS50 #VijaySethupathi50 #MakkalSelvan50@PassionStudios_ @TheRoute @Sudhans2017 @Jagadishbliss @DoneChannel1 pic.twitter.com/RdRIawFIlb
— VijaySethupathi (@VijaySethuOffl) July 11, 2023
இந்நிலையில் பல்வேறு படங்களில் நடித்துவரும் அவர் தற்போது தனது 50-வது படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் படி ‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் அந்த படத்தை இயக்க உள்ளதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தின் டைட்டில் லுக் நாளை (ஜூலை 12) மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







