லகிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் சொந்த ஊரான திகுனியாவில் கடந்த 3-ஆம் தேதி அரசு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க பங்கேற்க மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக இருந்தது. அவர்களுக்கு எதிர்ப்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு மூண்ட கலவரத்தில் பத்திரிகையாளர் உட்பட மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. விவசாயிகள் மீது காரை ஏற்றிய ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோரை கைது செய்ய கோரியும் அவர் தந்தையும், மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனவும் நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கிடையில், மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறும் போது, வன்முறையில் பதியப்பட்ட வீடியோக்களையும், உண்மைகளையும் மக்கள் பகிர்வதை தடுக்கவே இந்தப் பகுதியில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.








