வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15 ஆம் தேதி முதல் விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் இந்தியா வர, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வெளி நாடு செல்பவா்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தது.
இப்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி களுக்கு விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், ‘கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 2020 முதல் விசா வழங்குவதற்கும் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கும் இந்தியா கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இப்போது வெளிநாட்டுப் பயணிகளுக்கு புதிய விசாக்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, தனி விமானங்களில் (chartered flights) வருபவா்களுக்கு அக்டோபா் 15-ஆம் தேதி முதலும், வழக்கமான விமானங்களில் வரும் பயணிகளுக்கு நவம்பா் 15-ஆம் தேதி முதலும் விசா அனுமதி அளிக்கப்படும். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கு மாறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருவதாகவும், இதையடுத்து, வெளிநாட்டுப் பயணி களை அனுமதிப்பது தொடா்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement: