உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்திய நாத் உத்தரவின்படி மாநிலத்தில் 75 மாவட்டங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், முனிசிபல் கவுன்சில் அலுவலகங்கள் 17 மாநகராட்சிகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 217 பொது இடங்களில் வைஃபை வசதி அளிக்கப்பட உள்ளது.
எந்தெந்த இடங்களில் வைஃபை வசதி அளிக்க வேண்டும் என்பது குறித்து மாநிலத்தின் நகர்புற வளர்ச்சி துறையின் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரபிரதே மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள், தாலுக்கா அலுவலகங்கள், நீதிமன்றங்கள், வட்டார அலுவலகங்கள், பத்திரபதிவு அலுவலகங்கள் முக்கியமான சந்தைளில் வைஃபை வசதி அளிக்கப்பட உள்ளது.
இளைஞர்களுக்கு இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதன்படி இப்போது லக்னோ மற்றும் முக்கியமான இடங்களில் மட்டும் இலவச வைஃபை வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இப்போது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இலவச வைஃபை வசதி அளிப்பதற்காக முக்கிய நிறுவனங்களிடம் உத்தரபிரதேச அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இளைஞர்களுக்கு இலவச வைஃபை வசதி அளிக்கப்படுவதாக அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.







