ருமேனியா பட விழாவில் நயன்தாராவின் ’கூழாங்கல்’

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம் ருமேனியா சர்வதேசத் திரைப்பட  விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியுள்ள படம், ’கூழாங்கல்’. யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ள இந்தப்…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம் ருமேனியா சர்வதேசத் திரைப்பட  விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியுள்ள படம், ’கூழாங்கல்’. யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ள இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப்படம் ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று டைகர் விருதை வென்றது.

இந்த விருதைப் பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. இதையடுத்து, உக்ரேன் தலைநர் கீஃபில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா மற்றும் ஷாங்காய் பட விழாக்களில் இந்த படம் பங்கேற்றது.

இப்போது ருமேனியாவின் டிரான்ஸில்வேனியா சர்வதேசத் திரைப்பட விழாவிலும் இந்தப் படம் திரையிட தேர்வாகி இருக்கிறது.

https://twitter.com/Rowdy_Pictures/status/1418577015016366083

இதை நயன்தாரா- விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.