முக்கியச் செய்திகள் இந்தியா

உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அவருக்கு வயது 82. உடல் நலக் குறைவு காரணமாக குருகிராம் மெடன்டா மருத்துவமனையில் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அக்டோபர் 1ம் தேதி ஐசியூ பிரிவில் இவர் சேர்க்கப்பட்டார். முலாயம் சிங் யாதவுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அவர் காலமானார். மெயின்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக அவர் இருந்து வந்தார்.

10 முறை எம்எல்ஏவாகவும், 1 முறை எம்எல்சியாகவும் 7 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நட்புறவைக் கொண்டிருந்தவர்.

 மத்தியில் தேவகவுடா ஆட்சியின்போது, பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக அதிரடியாக பல திட்டங்களை கொண்டுவந்தவர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசர நிலையை எதிர்த்ததால் 19 ஆண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமாஜ்வாதி கட்சியை 1992ம் ஆண்டு தொடங்கிய இவர், மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார். இவரது மகன் அகிலேஷ் யாதவும் உத்தரப் பிரதேச முதல்வராக பதவி வகித்தவர் ஆவார்.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வகை 2-ல் வரும் 23 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி!

இலங்கையில் மருந்து தட்டுப்பாடு – மரணத்தின் விளிம்பில் நோயாளிகள்

Mohan Dass

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியது ஏன்?: ஹர்திக் படேல் விளக்கம்

Halley Karthik