நடிகை குஷ்புவுக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த கோல்டன் விசா வழங்கப்படும் பிரபலங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள், அந்நாட்டின்…

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த கோல்டன் விசா வழங்கப்படும் பிரபலங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள், அந்நாட்டின் குடிமக்களைப்போல் வாழலாம்.

அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் உடன் அழைத்துச் செல்லலாம். ஒரு நாட்டின் குடிமகனுக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாகத் தொழில் தொடங்குவது, வேலை பார்ப்பது போன்ற விஷயங்களில் அவர்கள் ஈடுபடலாம்.

குறிப்பாக இந்த கோல்டன் விசா நம் நாட்டின் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தி நடிகர்களான சஞ்சய் தத், ஷாருக்கான், போனிகபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான நடிகை ஜான்வி, அர்ஜூன், குஷி, அன்ஷுலாவுக்கும், சஞ்சய் கபூர், நடிகை ஊர்வசி ரவுடாலா ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மலையாள திரை நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், பிருத்விராஜ், நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை குஷ்புவுக்கும் வழங்கி கெளரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.

இதற்கு நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.