ரகுல்பிரீத் சிங்கின் காதலர் யார்?

தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை ரகுல்பிரீத் சிங் தனது பிறந்த நாளான நேற்று தான் காதலிக்கும் நடிகரை பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று, என்னமோ…

தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை ரகுல்பிரீத் சிங் தனது பிறந்த நாளான நேற்று தான் காதலிக்கும் நடிகரை பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று, என்னமோ ஏதோ, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரகுல்பிரீத் சிங். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த சிறப்பான நாளில் தனது காதலனைப் பற்றிய தகவலை அவர் பகிர்ந்துகொண்டார்.

இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானியோடு கைகோர்த்து செல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரகுல்பிரீத் சிங் ‘இந்த ஆண்டில் எனக்கு கிடைத்துள்ள பரிசு நீங்கள். எனது வாழ்க்கையை வண்ணமயமாக்கியதற்கும் இடைவிடாமல் என்னை சிரிக்க வைப்பதற்கும் நன்றி. இனி ஒன்றாக இணைந்து நமக்கான நினைவுகளை உருவாக்குவோம்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் ஜாக்கி பாக்னானி கதாநாயகராக நடித்திருப்பது குறிப்பிடதக்கது. ரகுல்பிரீத் சிங் பகிர்ந்த அதே புகைப்படத்தை தானும் பகிர்ந்த ஜாக்கி பாக்னானி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “நீ இல்லாமல் நாட்கள் நாட்களாக இல்லை. சுவையான உணவை நீ இல்லாமல் சாப்பிட பிடிக்கவில்லை. ஒரு உன்னத நபருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்கிறேன். நீதான் எனது உலகம் ” என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.