உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது பெண் ஒருவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த செங்கார், தனக்கு ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள காலம் வரை, தண்டனையை நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் சூர்ய காந்த் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு, குல்தீப் செங்காருக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறும் செங்கருக்கு உத்தரவிட்டுள்ளது.







