கேரள ஆளுநரை பல்கலைகழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் அவசர சட்ட மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, மாநிலத்தில் உள்ள 9 பல்கலைகழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய வேண்டும் கடந்த மாதம் 24ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், துணை வேந்தர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் பதவியை தவறாக பயன்படுத்துதல் அல்லது தவறாக செயல்படுதல் போன்ற குற்றங்கள் காணபட வேண்டும். அப்படி ஒன்றும் இல்லாமல் பணிநீக்கம் அல்லது ராஜினாமா செய்ய முடியாது. இது நிர்வாக துறை, நீதி துறை தான் முடிவு எடுக்க வேண்டும். இதில் ஆளுநர்கள், வேந்தர்களுக்கும் நடவடிக்கை எடுக்க முடியாது. இது கூட தெரியாமல் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
ஆளுநர் செயல்பாடு ஜனநாயக முறையை மீறும் செயலக உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய பல்கலைக்கழகங்களும் உள்ள அதிகாரத்தில் நுழையும் இந்த செயலை ஏற்று கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்றும், ஆளுநருக்கு பதிலாக நிபுணரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலை மையிலான இடதுசாரி அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து மாநில பல்கலைகழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புரல் அளித்துள்ளது.








