சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக இன்று சென்னை வந்திருந்த மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாற்று எரிப்பொருளுக்கான தேவையை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து பேசிய கட்கரி, ”கழிவு நீரைக்கூட பணமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். நாக்பூரில் கழிவுநீரை மின் உற்பத்திக்காக மஹாராஷ்டிரா அரசுக்கு விற்பனை செய்கிறோம். தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளால் மாசு ஏற்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், ”சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவு சாலை உருவாக்கப்படும். அதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பிரதமரும், தமிழக முதல்வரும் பங்குகொள்வார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மக்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. விவாயிகள் ட்ராக்டருக்கு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கலாம். ஃபாஸ்டேக் வாங்க கொடுக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது. இனியும் அவகாசம் நீட்டிக்கப்படாது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை சென்னை எம்.ஆர்.சி நகரில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாடு அமைப்பு மற்றும் நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பினை தொடங்கி வைத்துள்ளார். இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.