மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தே தீரும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி தெரிவித்துள்ளார்.
வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திமுக இதுவரை தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான எந்தத் திட்டங்களையும் கொடுக்கவில்லை. நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான வசீகரமான பொய்யான திட்டங்களையே வாக்குறுதிகளாக திமுக கொடுத்துள்ளது என விமர்சனம் செய்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக இதுவரை நிறைவேற்ற வலியுறுத்தவில்லை என குற்றம்சாட்டினார். கடந்த தேர்தலில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணியை இந்தத் தேர்தலிலும் தொடரும் எனவும் கூறினார்.
மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தே தீரும் எனவும், மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இல்லாத வகையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து சிறப்பான வசதிகளுடன் அமையும் எனவும் உறுதியளித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் உள்ளது. இதில் பங்களிப்பு இல்லாத திமுக தான் குறை கூறுகிறது விமர்சனம் செய்தார்.







