முக்கியச் செய்திகள் இந்தியா

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.1லட்சம் கோடி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.1 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்க 8 வகையான பொருளாதார திட்டங்களை அவர்கள் அறிவித்தனர்.

இதில், ஏற்கனவே உள்ள 4 திட்டங்கள் கூடுதல் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் எனவும், சுகாதாரத்துறைக்கு தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. நலிவடைந்த துறைகளை மீட்க ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவித் திட்டம். சுகாதாரத்துறைக்கு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய திட்டத்தின் மூலம், சிறு வியாபாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சிறிய நிதி நிறுவனங்கள் மூலம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படவுள்ளது.

இந்த சிறிய கடன் உதவி திட்டங்களின் மூலம் 25 லட்சம் பேர் பயனடையவுள்ளனர். ஊரடங்கால், சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிதி அமைச்சர், சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கிய பின்னர், வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு வரும், முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணம் செலுத்ததேவையில்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த ஆண்டு ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய 3 ஆயிரத்து 869 கோடி ரூபாய் நிதி செலவிடப்படும் என நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான திட்டமாக, புரத அடிப்படையிலான உரங்களுக்கான மானியமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அனுராக் தாக்கூர் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று!

Halley karthi

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

Jeba Arul Robinson

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

Jeba Arul Robinson