முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

இணையத்தில் லீக்கான Samsung Galaxy A22 மொபைல் விவரம்

சாம்சங்க் கேலக்ஸி நிறுவனம் தனது ஏ 22 மொபைல் போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது

ஐரோப்பாவில் சாம்சங்க் கேலக்ஸி ஏ 22 ஸ்மார்ட்போன் 4 ஜி மற்றும் 5 ஜி மாடல்களில் அறிமுகமாகியுள்ளது. தற்போது, இந்த மொபைலானது 4 ஜி மாடல்களில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து சாம்சங் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த மொபைல் குறித்து இணையத்தில் சில தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, இந்த மொபைலானது மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoC பிராசசருடன் வெளிவருகிறது. இதில், முதன்மை கேமராவாக 48 மெகாபிக்சல் சென்சார் கொண்ட குவாட் கேமராவுடன் வெளிவரும் எனவும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டர்னல் மெமரியுடன் வரும் மொபைல் ரூ.18,499க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் கசிந்த புகைப்படங்களின் படி இந்த மொபைலானது கருப்பு மற்றும் இளம் பச்சை நிறத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலானது 6.4 இன்ச் எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். கேமராக்களைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ 22 ஒரு குவாட்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 1.8 அபர்சர் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (ஓஐஎஸ்), 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட் -ஆங்கிள் எஃப் / 2.2 லென்ஸ், எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் wide சென்சார் மற்றும் எஃப் / 2.4 அபர்சர் கொண்ட 2 மெகாபிக்சர் சென்சாருடன் வெளிவருகிறது. முன்பக்கத்தில், சாம்சங் கேலக்ஸி ஏ 22 4 ஜி 13 மெகாபிக்சல் சென்சாருடன் வெளிவருகிறது.

மேலும், இந்த மொபைல் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. மொபைலை அன்லாக் செய்வதற்கான பிங்கர் பிரிண்ட் சென்சாரானது மொபைலின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:

Related posts

தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்துள்ளனர்: டிடிவி தினகரன்

Saravana

கொரோனா தொற்றை பரப்பிய விமான ஊழியர்!

எல்.ரேணுகாதேவி

மெரினாவில் குவியத் தொடங்கிய குப்பைகள்: தூய்மை பணி தீவிரம்!

Jayapriya