விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர்!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கொலை வழக்கில் தனது கணவர் பெயர் சேர்க்கப்பட்டதாகக் கூறி, பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி.…

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கொலை வழக்கில் தனது
கணவர் பெயர் சேர்க்கப்பட்டதாகக் கூறி, பெண் கவுன்சிலர்
குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்
துர்காதேவி. திமுகவை சேர்ந்த இவர் கிழ்ப்புத்துப்பட்டு ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
துர்காதேவியின் கனவர் நாகராஜ் மீன் பிடிக்கும் வேலை செய்து வருகிறார்.
மேலும், கடந்த 30ஆம் தேதி கோட்டகுப்பம் அருகே விமல்ராஜ் என்பவர் கொலை
வழக்கில், கோட்டகுப்பம் காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் கொலை வழக்கில் தனது கணவருக்கு எந்த தொடர்பும் இல்லை
என்றும், காவல்துறையினர் திட்டமிட்டு தனது கணவர் பெயரை வழக்கில்
சேர்த்துள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, திமுக பெண் ஒன்றிய கவுன்சிலர்
துர்காதேவி குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில்
முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து மேலே
ஊற்றி கொண்டு, தற்கொலைக்கு முயன்றனர். இதனையடுத்து, ஆட்சியர்
அலுவலக பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து,
உடலில் தண்ணீர் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனவர்களிடம் சமாதான
பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

மேலும், குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றவர்களை, காவல்நிலையம்
அழைத்து சென்று போலீசார் விசாரனை மேற்கொண்டனர். திமுக பெண்
ஒன்றிய கவுன்சிலர் ஆட்சியர் அலுவலகத்தில், தற்கொலைக்கு முயன்ற
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.