பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (13.09.2023) நடைபெறவுள்ளது.
டெல்லியில் நாளை (13.09.2023) நடைபெறும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைப்பது குறித்து முடிவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது.
5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களிலும், மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டும் நடைபெறவுள்ள நிலையில், வாக்குகளை பெறுவதற்காக விலை உயர்வை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த முறை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய அமைச்சரவைக் கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பான செய்திகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







