விடாமுயற்சி படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் அபு தாபியில் நடைபெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.
சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலவரம் குறித்து கேட்டதில், விரைவில் விடாமுயற்சி ஆரம்பமாகும் என அறிவித்து அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கினார்.
இப்படியான சூழ் நிலையில், சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுவதாகவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் அபு தாபியில் நடைபெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.







