ஹங்கேரியில் இன்று தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் 27 பேர் பங்கேற்கின்றனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் இன்று முதல் ஆகஸ்ட் 19 முதல் 27ஆம் தேதி வரை ஹங்கேரியில் நடைபெறுகிறது இந்தியாவில் இருந்து 23 வீரர்கள், 4 வீராங்கனைகள் என 27 பேர் கலந்துகொள்கின்றனர். முதல் நாளான இன்று இந்திய நேரப்படி பகல் 12.20மணிக்கு ஆடவர் 20கிலோ மீட்டர் ரேஸ் வாக் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பங்கேற்கின்றனர்.
ஒட்டுமொத்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 2 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. 2003ல் நீளம் தாண்டுதலில் அஞ்சு பார்பி ஜார்ஜ், 2022ல் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோர் மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர்
இம்முறை பதக்க வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரஜ் சோப்ரா, அவினாஸ், ஜெஸ்வின் அல்ட்ரின், ப்ரவீன் சித்ரவேல், ஜோதி யார்ராஜி, அன்னு ராணி, உள்ளிட்ட வீரர்கள் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.







