மத்திய அரசுக்கு பதிலாக ஒன்றியம் அல்லது ஒன்றிய அரசு என்ற சொற்றொடரைப் பயன்படுத்த கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கொல்கத்தாவைச் சோ்த ஆத்மாராம் சரோகி என்ற 84 வயது முதியவர் டெல்லி உயா நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அரசின் அனைத்து உத்தரவுகள், அறிவிக்கைகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் மத்திய அரசுக்குப் பதிலாக ஒன்றியம், ஒன்றிய அரசு அல்லது இந்திய ஒன்றியம் என்ற வாாத்தைகளைப் பயன்படுத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாகும். ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த ‘மத்திய அரசு என்ற கருத்தாக்கம் தற்போது பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மனு டெல்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நரூலா அமாவு முன் விசாரணைக்கு வந்தது.இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்பணிகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்த மத்திய அரசு வழக்கறிஞர் தேவையற்ற இந்தப் பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.