முக்கியச் செய்திகள் உலகம்

உக்ரைன் போர் சூழல் – வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்

உக்ரைன் எல்லையில் ரஷ்யா, போர் விமானங்களை குவித்து வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய நாட்டின் படைகள் உக்ரைனுக்கு அருகில் உள்ள பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ரஷ்ய பகுதிகளில் திரட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்த சில நாட்களாகவே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. போர் அபாயத்தால் இந்தியா உள்பட நெதர்லாந்து, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூரதங்கள் உக்ரைனிலிருந்து தனது மக்களை உடனடியாக வெளியேறுமாரும், அவசிய பணிகளைத் தவிர வேறு எதற்கும் உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் எனவும் உத்தரவிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரஷ்யா தனது ராணுவ படைகளை உக்ரைன் எல்லையிலிருந்து விலக்கி வருவதாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து, ரஷ்யா தனது படைகளை திரும்பி கொண்டு சென்றதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும், போர் மூளும் அபாயம் இருந்துதான் வருகிறது எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், உக்ரைன் எல்லையின் செயற்கைக்கோள் புகைப்படங்களை மாக்சர் டெக்னாலஜீஸ் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கா கூறியப்படியே, ரஷ்யா ராணுவம் உக்ரைன் எல்லையிலிருந்து விலகாமல், மேலும் அதிகமாக தனது படைகளை குவித்து வருகிறது என்பது தற்போது ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையை ஒட்டிய வெவ்வேறு பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. உக்ரைன் நாட்டு எல்லைப்பகுதி அருகில் போர் விமானங்கள் குவிக்கப்பட்டிருப்பதை இந்த புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம் என உக்ரைன் உறுதியளித்தால் போர் தொடுக்க வேண்டிய அவசியமில்லை என முன்பிருந்தே ரஷ்யா தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எல்லையில் இருநாட்டு வீரர்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், போர் தொடுக்க இருப்பது உறுதி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து உக்ரைனை ரஷ்யா அதிரவைத்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை ரஷ்யா செலுத்தியது. தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விவசாயிகளுக்கு பிரதமர் இழப்பீடு வழங்கவில்லை; ராகுல் காந்தி

Halley Karthik

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி

Halley Karthik

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி அபார வெற்றி

Gayathri Venkatesan