உக்ரைன் – ரஷ்ய போர்: எரிபொருள் தட்டுப்பாடு

உக்ரைன் – ரஷ்ய போரால் இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் விளைவாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அந்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…

உக்ரைன் – ரஷ்ய போரால் இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் விளைவாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அந்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தி பாதிப்பால் இலங்கையில் நாடு முழுவதும் நாளுக்கு, 7:30 மணி நேரம்
மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு
ஆளாகி வரும் நிலையில், தற்போது எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்போது 70 சதவீத தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், இதே நிலை தொடர்ந்தால் 90 சதவீத பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும் என்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

அதேபோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக நாள் தோறும் பெட்ரோல் நிலையங்களில் காத்துக்கிடப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.