நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு; இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு!

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் பெற்று அதை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடினார் நீரவ் மோடி. இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி லண்டனில் கைது செய்யப்பட்டு வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.

இதனிடையே சிறையில் உள்ள நிரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார். அதன்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீரவ் மோடி நேற்று ஆஜா்படுத்தப்பட்டார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த விசாரணையில், நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply