உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில்!

உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை,  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 10 டன் எடையுடைய பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரித்துள்ளது. தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.  உகாதி…

உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை,  திருமலை திருப்பதி
தேவஸ்தானம் சுமார் 10 டன் எடையுடைய பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரித்துள்ளது.

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.  உகாதி என்ற பெயரில் ஆந்திரா,  தெலங்கானா மக்களும் யுகாதி என்ற பெயரில் கர்நாடகா மக்களும் வருடப்பிறப்பை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு, சுமார் 10 டன் எடையுள்ள வண்ணமலர்களால் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டு மலர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மலர்களை பயன்படுத்தி கோயில் முன் வாசல்,  தங்க கொடிமரம்,  கோயிலின் உட்பகுதி என அனைத்து பகுதிகளையும் தேவஸ்தான நிர்வாகம் கண்கவர் வகையில் அலங்கரித்துள்ளது.  மேலும் பல்வேறு பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வந்திருக்கும் பக்தர்கள் மெய்மறந்து,  மலர் அலங்காரங்களை  பார்த்து ரசித்து செல்கின்றனர்.  இதனைத்தொடர்ந்து இன்று உகாதியை முன்னிட்டு காலை 10 மணிக்கு ஆஸ்தானம் தொடங்கியது.  அப்போது தேவஸ்தான வேத பண்டிதர்கள் புதுவருட பஞ்சாங்கத்தை படித்து பலன்களை தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.