உதயநிதி ஸ்டாலினின் புகார் பெட்டி ரகசியம்.!

உதயநிதி ஸ்டாலின்.. இந்த பெயர்தான் இப்போது எங்கு பார்த்தாலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர். தான் திருவல்லிக்கேனி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்போது, அந்த பகுதியில் வாழும் மக்கள்…

உதயநிதி ஸ்டாலின்.. இந்த பெயர்தான் இப்போது எங்கு பார்த்தாலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர். தான் திருவல்லிக்கேனி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்போது, அந்த பகுதியில் வாழும் மக்கள் சிலருக்கும் தயக்கமும் இருந்தது. அது என்ன தயக்கம்..? அவர் பெரிய நடிகர். திமுக ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சரின் மகன்., இவரை எப்படி பார்ப்பது, எப்படி அணுகுவது , நம் குறைகளை எப்படி தீர்ப்பது என்றெல்லாம் ஒரு சிலர் ஆருடம் சொன்னார்கள். ஆனால் அந்த ஆரூடங்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்து., இவர் எங்க வீட்டு பிள்ளை., எங்க தம்பி உதயநிதி., எங்க அண்ணன் உதயநிதி என்று உரிமை உறவு கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் அந்த தொகுதி மக்கள். ஏன் இவ்வளவு வரவேற்பு உதயநிதி ஸ்டாலினுக்கு..?


உதயநிதி ஸ்டாலின் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி திமுக இளைஞரணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 35 ஆண்டுகள் தன்வசம் வைத்திருந்த அதிகாரமிக்க பதவி. உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக நியமித்த உடன் கட்சிக்குள் சலசலப்பும் சில மனக்கசப்புகளும் ஏற்பட்டது. “ வாரிசு அரசியல்” என்ற லேபில் ஒட்டபட்டது. ஆனால் அதற்கு உதயநிதி கொடுத்த பதிலோ , ”விமர்சனங்கள் வரும்.. அதை என் செயலால் முறியடிப்பேன்” என்பதுதான்.. பதவியேற்ற ஒரு மாதக்காலத்திற்குள்ளேயே.. சற்று சுணக்கமாக இருந்த இளைஞரணியைக்கு முறுக்கேற்ற ஆரம்பித்தார். சுற்றுப்பயணம், நிர்வாகிகள் கூட்டம் என இளைஞரணியை இயக்க ஆரம்பித்தார். பின்னர், “பொய் பெட்டி “ என்ற நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார். அதுதான் உதயநிதி ஸ்டாலின் அடித்த சிக்சர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பொய்பெட்டி நிகழ்ச்சியின் மூலம் திமுக மீதும், கருணாநிதி மீதும், வைக்கப்படும் அவதூறுகளை தகர்த்தார். இது கட்சிக்காரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கவர்ந்தார் உதயநிதி என்றே சொல்லலாம். முதலில் முனுமுனுத்தவர்கள் இப்போது அவரை அரவணைத்தனர். ஒரு வழியாக கட்சியில் தன்னை தன் செயல்பாடுகள் மூலம் நிலைநிறுத்திய உதயநிதி, அடுத்தது தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தார்.


தேர்தலில் போட்டியிடுகிறார் என்றதும் , பொது மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதே “ வாரிசு அரசியல் “ குற்றச்சாட்டுதான். அப்போதும் சிரித்தப்படி “செயலில் பாருங்கள்” என்று பதிலடி கொடுத்துவிட்டு களத்தில் இறங்கினார். தேர்தலில் வெற்றிபெற்ற நாளிலிருந்து ஒருநாள் கூட தொகுதிக்கு போகாமல் இருப்பதில்லை உதயநிதி ஸ்டாலின். இன்னும் சொல்ல போனால், வீடு வீடாக சென்று குறை கேட்கிறார். தொலைபேசியில் மக்கள் குறைகளை கேட்கிறார். உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். அந்த வகையில்தான், இப்போது “புகார் பெட்டி” திட்டத்தையும் தொடங்கியுள்ளார். மக்கள் தங்கள் குறைகளை , புகார்களை அந்த பெட்டியில் போட்டால் போதும், தினமும் அந்த புகார் பெட்டியிலுள்ள புகார்கள், மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், twitterல் ஒருவர் வாட்சப் எண் இருந்தால் புகார்களை தெரிவிக்க நன்றாக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார், அதற்கு பதிலளித்த உதயநிதி, Whatsapp , mobile app என அனைத்தும் தயாராகிக்கொண்டிருக்கிறது , கவலை வேண்டாம் என்றார். இப்படி ஒரு mla கிடைக்க நாங்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்கிற தொகுதி மக்கள் ஒருபக்கம், மறுபக்கம் இவர் எங்க தொகுதியில் mla ஆகியிருக்கலாமே என்று பகக்த்து தொகுதி மக்கள் ஏங்குகிறார்கள்… இப்படி பொய் பெட்டியில் ஆரம்பித்த உதயநிதியின் அரசியல் .. புகார்பெட்டி வரை படு ஜோராக வெற்றி நடைபோடுகிறது..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.