கருணாநிதியின் திராவிட கொள்கைகளை ஸ்டாலின் எடுத்து செல்வது போல அடுத்து உதயநிதி எடுத்து செல்வார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இந்த கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர்
கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, நலதிட்ட உதவிகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல் குறித்து ஆலோசிக்கபட்டு தீர்மானங்கள்
நிறைவேற்பட்டன.
மேலும் தமிழ்நாட்டின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பணி செய்ய
முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திராவிட இயக்க கொள்கைகளை தமிழ்நாட்டில் விதைத்து சென்றவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருனாநிதி எனவும் அதை தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் என ஆட்சி செய்து வருவதாக கூறினார்.
மேலும் அடுத்த தலைமறைக்கு திமுகவின் இயக்க கொள்கைகளை எடுத்து செல்ல கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் செயல்படுவது போல உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை மிஞ்சி செயல்படுவார் என்பதில் வேறுபட்ட கருத்து இருக்காது என்றும் அவர் கூறினார். தற்போது விழுப்புரம் மாவட்டம் மு.க.ஸ்டாலின் மாவட்டமாக திகழும் எனவும் வருங்காலத்தில் உதயநிதியின் மாவட்டமாக திகழும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.







