உதகை மலர் கண்காட்சி மே 15-ல் தொடங்கி 25 வரை நடைபெறும் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

உதகை மலர் கண்காட்சி மே 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி ஆட்சியர் லட்சுமி அறிவித்துள்ளார.

நீலகிரி மாவட்டம் உதகை வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், பள்ளி வாகனங்கள் ஆய்வு உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதையொட்டி பள்ளி வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், உதகை மலர் கண்காட்சி மே 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார். 127வது
மலர்க்கண்காட்சி மே 16ஆம் தேதி துவங்கி மே 21ஆம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையால் மாற்றி அமைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் நீலகிரியில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் யாரும் வாகனங்களில் படுத்து உறங்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.