இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை

இந்திய கோதுமையை ஏற்றுமதி செய்ய 4 மாதங்கள் தடை விதித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம் நாடு முழுவதும் சமீபத்தில் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, தேவை அதிகரித்தது. இதனால் விலை கணிசமான அளவில் உயரத் தொடங்கியது.…

இந்திய கோதுமையை ஏற்றுமதி செய்ய 4 மாதங்கள் தடை விதித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்

நாடு முழுவதும் சமீபத்தில் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, தேவை அதிகரித்தது. இதனால் விலை கணிசமான அளவில் உயரத் தொடங்கியது. இதனை சரி செய்ய மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு மே 13ம் தேதி முதல் தடை வித்தது.

இதனையடுத்து தற்போது இந்திய கோதுமை, கோதுமை மாவு மற்றும் அது சார்ந்த பொருட்களை ஐக்கிய அரபு நாடுகளுக்குளிலிருந்து ஏற்றுமதி செய்ய 4 மாதங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தடை விதித்துள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 13ம் தேதிக்கு முன்னதாக ஐக்கிய அமீரக நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய கோதுமைகளை மறு ஏற்றுமதி செய்வதற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா என இரு நாடுகளும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, வர்த்தகத்தை பாதித்துள்ள சர்வதேச முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ஏற்கெனவே இந்தியா கோதுமை ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் சிறப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நாடுகளுக்கு தொடர்ந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த சூழலில் அமீரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2020ல் ஐக்கிய அரபு அமீரகம் ரூ.1,140 கோடி மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து கோதுமையை இறக்குமதி செய்துள்ளதாக வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.